டொரான்டோ மேயரின் பாலியல் சர்ச்சை! ஆசிய பெண் காரணம் அல்ல!!
கனடா நாட்டின் மிகப்பெரிய நகரமான டொரன்டோவின் மேயர் John Tory தனது முன்நாள் பெண் ஊழியர் ஒருவருடன் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து பதவி விலகியிருந்தார்.
மேயரின் ஆலோசகராகக் கடமையாற்றிய 31 வயது இளம் பெண்ணுடன் மேயர் வைத்திருந்த உறவை உள்ளூர் ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்தே, தனது தவறை ஒப்புக்கொண்ட நிலையில் அவர் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், 68 வயதான டொரன்டோ மேயருடன் பாலியல் தொடர்பை வைத்திருந்ததாக கூறப்படுகின்ற இளம் பெண் ஒரு ஆசிய பெண்ணாக இருக்கலாம் என்றும், அது ஒரு தமிழ் பெண்ணாக இருக்கலாம் என்றும் மக்கள் மத்தியில் பேச்சடிபட்டது.
ஆனால் மேயருடன் தொடர்புவைத்திருந்த பெண் ஒரு தமிழ் பெண்ணோ அல்லது ஆசியப் பெண்ணோ அல்ல என்றும், அது ஒரு கனேடிய தேசத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒரு பெண் என்றும் தற்பொழுது தெரியவருகின்றது.
அரசியல் காழ்ப்புனர்வு காரணமாகவே தமிழ் பெண்ணின் பெயர் கனேடிய தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
ஒரு சிலரால் விஷமத்தனமாகப் பரப்பப்பட்ட அந்தச் செய்தியினால் பல தமிழ் குடும்பங்கள் சங்கடத்துக்குள்ளாயியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.