சீன மண்ணில் காலடி வைத்தார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு முறைப் பயணமாக இன்று புதன்கிழமை (மே 13) மாலை சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றடைந்தார். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்தப் பயணத்தில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்து உரையாடவுள்ளார்.
சர்வதேச அரசியலில் எதிராளிகளாக அறியப்படும் அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகளின் சந்திப்பில் ஈரான் போர், வர்த்தகம் மற்றும் தைவான் நாட்டுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு
இந்த நிலையில், பெய்ஜிங் சென்றடைந்த ஜனாதிபதி ட்ரம்ப்பை சீன துணை ஜனாதிபதி ஹான் ஸெங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். மேலும், சுமார் 300 சீன இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினரால் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்தப் பயணத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முக்கிய அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |