நியூயோர்க் தேர்தலில் இந்திய வம்சாவளியின் வெற்றியை சவால் செய்த ட்ரம்ப்
தற்போது நடைபெற்று வரும் நியூயோர்க்கின் மேயர் தேர்தலுக்கு முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதன் வாக்காளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி நியூயோர்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டாட்சி நிதியை பங்களிப்பது சாத்தியமில்லாத ஒன்று என ட்ரம்ப் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒரு ஜனாதிபதியாக அரசாங்கத்தின் பணத்தை ஒரு நல்ல விடயத்திற்கு வழங்குவதையே உறுதியாக கொண்டுள்ளேன் என்றும் ட்ரம் விவரித்துள்ளார்.
நியூயோர்க் தேர்தல்
ஜனாதிபதியாக தனக்கு நியூயோர்க்கிற்கு நிறைய பணம் கொடுப்பது கடினமாக இருக்கும். ஏனென்றால் ஒரு கம்யூனிஸ்ட் நியூயோர்க்கை வழிநடத்தினால், அங்கு அனுப்பும் பணம் வீணடிக்கப்படுவதுதான்” என தெரிவித்துள்ளார்.

நியூயார்க் தேர்தலில் குடியரசு வேட்பாளராக ஆன்ட்ரு குவோமோ போட்டியிட்டு வருகின்றார்.
ஆனால் மம்தானி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கருத்துக் கணிப்பு சொல்கிறது.
மம்தானிக்கும் முன்னாள் ஆளுநர் ஆன்ட்ரு குவோமோவுக்கும் (Andrew Cuomo) போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிதியளிப்பதைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் பலமுறை முயன்றிருக்கிறது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க மத்திய அரசாங்கம் இந்த ஆண்டு நியூயார்க் நகருக்கு சுமார் 7.4 பில்லியன் டொலர் (9.6 பில்லியன் வெள்ளி) நிதியளித்திருப்பதாக அறிக்கைகள் மேற்கொள்காட்டுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்