வெனிசுலாவின் ஜனாதிபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்திய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த கடுமையான சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
விக்கிபீடியா பக்கத்தில் வெளியிடப்பட்டதைப் போல தோற்றமளிக்கும் வகையில் திருத்தப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடக கணக்கில் வெளியிட்டு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
வெனிசுலாவின் தற்காலிக ஜனாதிபதி
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், 3 ஆம் திகதி வெனிசுலா நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் நாட்டின் தலைநகரில் அமெரிக்காவால் தொடர்ச்சியான பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தொடர் தாக்குதல்களின் இலக்கு வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள பல இராணுவத் தளங்கள் ஆகும்.
அங்கு, அமெரிக்க இராணுவம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |