ஈரானின் பிடிவாதம் : கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறினார் ட்ரம்ப்
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் உறுதியான முடிவு எடுக்கப்படல்லை. இதனால், அதிருப்தி அடைந்த அமெரிக்க ஸஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சு தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
வெள்ளை மாளிகையில் ஆலோசனை கூட்டம்
சமீபத்தில் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டு, இரு தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த தற்காலிக ஒப்பந்த வரைவு குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

அமைதி பேச்சு அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்பாக, அமெரிக்காவால் வெளிநாடுகளில் முடக்கப்பட்ட 2.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களில் பாதி தொகையான 1.14 லட்சம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஈரான் பிடிவாதமாக நிபந்தனை விதித்தது.
நிபந்தனையால் ஆத்திரமடைந்த ட்ரம்ப்,
இந்த நிபந்தனையால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேலும், 'மறு அறிவிப்பு வரும் வரை, ஈரானுக்கு எந்த பணப் பரிமாற்றமும் செய்யப்பட மாட்டாது' என கறாராக தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஹோர்முஸ் நீரிணை திறப்பு மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த இமாலய கருத்து வேறுபாடுகள் காரணமாக, மேற்காசியாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தற்போதைக்குத் தென்படவில்லை என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |