நீ ஒரு பைத்தியம்: நெதன்யாகுவை திட்டித்தீரத்த ட்ரம்ப்
லெபனான் மீதான இஸ்ரேலின் சேமாசமான தாக்குதல், அமைதி ஒப்பந்தத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்துளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரமாரியாக திட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நெதன்யாகுவுடனான அந்த உரையாடலில் ட்ரம்ப் என்ன பேசினார் என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
நீ ஒரு பைத்தியகாரன்
அதில் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு நீங்கள் ஆபத்தை விளைவிக்கிறீர்கள் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார். பதற்றம் அதிகரித்தால் இஸ்ரேல் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
அதன்பின் ஆவேசமான ட்ரம்ப் திட்ட தொடங்கினார். நீ (நெதன்யாகு) ஒரு பைத்தியகாரன். நான் இல்லையென்றால் நீ சிறையில் இருந்திருப்பாய்.
நான்தான் உன்னை காப்பாற்றுகிறேன். இப்போது எல்லோரும் உன்னை வெறுக்கிறார்கள். இதன் காரணமாக எல்லோரும் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் என்று ட்ரம்ப் திட்டினார் என குறித்த ஊடக செய்திகள் விவரித்துள்ளன

ஒரு கட்டத்தில் நெதன்யாகுவிடம், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று ட்ரம்ப் கோபத்துடன் கத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது ஹிஸ்புல்லாதான் போர் நிறுத்தத்தை மீறியதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஆனால் லெபனானில் பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து ட்ரம்ப் கவலை தெரிவித்தார். ஹிஸ்புல்லா தளபதிகளை தனிப்பட்ட முறையில் குறிவைத்து கட்டிடங்களை அழிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
உரையாடலுக்கு பின்னர் ட்ரம்பின் அறிவிப்பு
நெதன்யாகுவுடனான உரையாடலுக்கு பிறகு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதையடுத்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கும் திட்டங்களில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் நெதன்யாகு கூறும்போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் பெய்ரூட்டில் உள்ள அந்த இயக்கத்தின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்.
எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதேவேளையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைதிட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |