ஈரானில் ட்ரம்பின் அடுத்த இலக்கு! வெள்ளை மாளிகையின் அறிவிப்பு
ஈரானுடனான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டத்தில், அந்நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அகற்றுவதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதன்மை இலக்காக இருக்கும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், “ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் விவகாரம் ஜனாதிபதியின் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.இது ஜனாதிபதி ட்ரம்ப் எக்காரணம் கொண்டும் பின்வாங்காத ஒரு 'சிவப்புக்கோடு' ஆகும்.
இந்த இலக்கை ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் அடைய அமெரிக்கா விரும்புவதாகவும், ஆனால் அதில் சமரசம் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
யுரேனியம் செறிவூட்டல்
முன்னதாக, ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் அணுசக்தித் திறனை நிரந்தரமாக முடக்குவது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

Image Credit: PRIO
அதன்போது, இனி யுரேனியம் செறிவூட்டல் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ள அணுசக்தி தூசுகளை ஈரானுடன் இணைந்து அமெரிக்கா தோண்டி எடுத்து அகற்றும் எனவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |