இந்தியா - பாகிஸ்தான் மோதலை வைத்து சுயலாபம் கண்ட ட்ரம்ப்
இந்தியா (India) மற்றும் பாகிஸ்தான் (Pakistan) ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதலில் அமெரிக்காவும் (America) மற்றும் சீனாவும் (China) பாரிய நன்மையை கண்டுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலுந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்ய (Russia) போரை 24 மணித்தியாலத்தில் நிறுத்துவேன் எனக்கூறி ஆட்சி அமைத்தார்.
இருப்பினும், அவரால் அதனை நிறுத்த முடியவில்லை, அத்தோடு ஹமாஸை (Hamas) தான் அழிப்பேன் என்றவர் அதிலும் வெற்றி பெறவில்லை.
இவ்வாறான பின்னணியில் அவருக்கு வெற்றியை கொடுத்தது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல்தான்.
இரண்டாவது நன்மையை எட்டியது சீனா காரணம், தனது ஆயுதங்களை பரிசோதனை செய்வதற்கு இது சீனாவிற்கு வாயப்பாக அமைந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய பாகிஸ்தான் மோதல், அமெரிக்க மற்றும் சீனாவின் கூட்டு, சர்வதேச அரசியல் மற்றும் பலதரப்பட்ட நடைமுறை விடங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
