சட்டவிரோத தகவல் கசிவு..! - கைது செய்யப்படவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்
அமெரிக்காவின் முன்னால அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைதுசெய்யப்படவுள்ளதாக வெளியான கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படக்கூடும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நாளை மறுதினம் (21.03.2023) நடக்கும் எனவும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடு
அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"நியூயோர்க் மன்ஹாட்டன் அரசு சட்டத்தரணி அலுவலகத்திலிருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் அதிபர் ட்ரம்ப் நாளை மறுதினமான செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் எனத் தெரிவிக்கின்றன" என்று கூறியுள்ளார்.
BREAKING: Fox News is reporting that President Donald Trump is expected to be arrested next week.pic.twitter.com/FxgfUNVCBF
— Collin Rugg (@CollinRugg) March 17, 2023
டொனால்ட் ட்ரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்குச் சட்ட நடைமுறைக்கான அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
