புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை: கொந்தளித்த ட்ரம்ப்
ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்ய நாடுகளின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை எதிர்ப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், நேற்றும் உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.
கடும் தாக்குதல்
இதனடிப்படையில், போரை நிறுத்த டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் புடினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை என்று டொனால்ட் டர்ம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்ற எண்ணம் புடினுக்கு இருக்க வேண்டும்.

அப்படி இல்லாத பட்சத்தில் அவருடன் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
அவருடன் என்றுமே மிக சிறந்த உறவு உண்டு ஆனால் இப்போது மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்