உச்சக்கட்ட சினத்தில் ஈரான்: பெரிய அளவிலான தாக்குதல்..! ட்ரம்ப்பின் அறிவிப்பு
ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரான் இன்னும் தயாராகவில்லை
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இதுவரை நாங்கள் பார்த்ததை விட அவர்கள் இப்போதுதான் அதிக தீவிரத்துடன் செயல்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
ஆனால், அதற்காக நாம் ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவோம் என்று அர்த்தமல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |