ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம்! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு
Donald Trump
Middle East
Iran-US Conflict
By Dilakshan
ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம் அவர்கள் "பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நீர்வழிகள்
அதில் மேலும் ட்ரம்ப் , "சர்வதேச நீர்வழிகளைப் பயன்படுத்தி குறுகிய காலத்திற்கு உலக நாடுகளை அச்சுறுத்துவதைத் தவிர, தங்களிடம் வேறு எந்த துருப்புச் சீட்டும் இல்லை என்பதை ஈரானியர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அவர்கள் இன்று உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணமே பேச்சுவார்த்தை நடத்துவதற்குத்தான்!" என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |