ட்ரம்பின் சீன பயணம் ஈரானிலிருந்து வெளியான கிண்டலான அறிவிப்பு
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் சர்வதேச விவகார ஆலோசகர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரவிருக்கும் பெய்ஜிங் பயணத்தின் போது, தெஹ்ரானுடனான போர் நிறுத்தத்தை ஒரு வெற்றியாகக் காட்டக்கூடாது என்று குறிப்பிட்டார்.
" ட்ரம்ப், இன்று நாங்கள் கடைப்பிடித்த நிதானத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நீங்கள் பெய்ஜிங்கில் வெற்றிவாகை சூடிவிடலாம் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். முதலில் 'மேற்கு ஆசியாவின் புதிய புவிசார் அரசியல் ஒழுங்கின் அடிப்படைகளை' கற்றுக்கொள்ளுங்கள்,"
ராஜதந்திரத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்
ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் சீன பயணத்தைக் குறிப்பிடும் வகையில் அலி அக்பர் வேலாயதி இவ்வாறு கூறினார்.

"நாங்கள் உங்களை 'போர்க்களத்தில்' தோற்கடித்தோம், எனவே நீங்கள் ராஜதந்திரத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்," என்றும் வேலாயதி மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |