ரஷ்ய எண்ணெய் வாங்கினால் பொருளாதாரம் சிதையும்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ரஷ்யாவிடமிருந்து (Russia) கச்சா எண்ணெய் வாங்கும் சீனா (China), இந்தியா (India) மற்றும் பிரேசில் (Brazil) போன்ற நாடுகளுக்கு அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நூறு சதவீதம் வரி விதிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை நடைமுறையில் உள்ளது.
இருப்பினும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றது.
உக்ரைன் போர்
இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ரஷ்யா போரை நீட்டித்து வருவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகின்றார்.
இந்தநிலையில், ட்ரம்ப் உடைய அமைச்சரவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு ட்ரம்ப் நூறு சதவீதம் வரி விதிக்க உள்ளார்.
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழித்து விடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
