செவ்வாயன்று தேசிய துக்கதினம் -உள்துறை அமைச்சு அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Japan Sri Lanka Relationship
Japan
By Sumithiran
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, அன்றைய தினம் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த துக்க நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை இளைஞர் ஒருவரின் துப்பாக்கிசூட்டில் முன்னாள் அரச தலைவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
