துருக்கி நிலநடுக்கம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்த ரொனால்டோ
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்களினால் உயிரிழந்தோர் தொகை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் வகையில் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களும் தங்களால் ஆன நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன.
அந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது.
உதவ முன்வந்த ரொனால்டோ
இந்நிலையில் துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையொப்பமிடப்பட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார் என துருக்கி கால்பந்து வீரர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக சொன்னதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ள பணம்
மேலும், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக அறிவித்தார். அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
