அதிகரிக்கும் போர் பதற்றம் : பாகிஸ்தானுக்கு வந்து குவிந்த ஆயுதங்கள்
ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவுடன்(india) போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு(pakistan) இராணுவ தளபாடங்களை போர் விமானங்கள் வாயிலாக துருக்கி(turkey) அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை வழங்கி, இராணுவ ரீதியாக சீனா(china) உதவுகிறது. பாகிஸ்தான் சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் வலுவான பாதுகாப்பு உடன்படிக்கை செய்துள்ளன.
துருக்கி அனுப்பிய ஆயுதங்கள்
அதன்படி, துருக்கியும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவியை வழங்கி வருகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் துருக்கி விமானப்படைக்கு சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானம் சென்றது. அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன.
இதுபோல, இஸ்லாமாபாத் விமானப்படை தளத்துக்கும், ஆறு 'சி -130 ஹெர்குலிஸ்' ரக போர் விமானங்களை துருக்கி நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட இராணுவ தளவாடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
