தமிழக வெற்றி கழகத்தில் பதவி கிடைக்காத விரக்தியில் தவறான முடிவெடுத்த பெண்!
Vijay
Thamizhaga Vetri Kazhagam
By Kanooshiya
தமிழக வெற்றிக் கழகத்திற்கான தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்காத காரணத்தினால் அஜிதா ஆக்னல் என்பவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
இதன்காரணமாக, உடல் நிலை மோசமடைந்து அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தலைவர் நியமனம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய தலைவர்கள் கட்சித் தலைவர் விஜய் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த வேறு ஒருவருக்கு கிடைத்ததால் விஜய் பயணித்த காரை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி