வெளிநாடொன்றை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்
பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, முதல் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
அதன் பின்னர் சில மணி நேரங்களில் 3.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
எளிதில் இடிந்து விழும் தன்மை
இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கு-தென்மேற்கே 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சூபாக்கா நகரில், வீடுகள் பெரும்பாலும் களிமண் செங்கற்களால் கட்டப்படுவதால், அவை எளிதில் இடிந்து விழும் தன்மை கொண்டவையாக உள்ளன. உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியாக சேதமடைந்தன.
"நிலநடுக்கம் எங்கள் வீட்டை அழித்துவிட்டது. இங்கு பல களிமண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன," என்று சோங்கோஸ் பாஜோவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்புவாசி N தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்