உள்ளுராட்சி தேர்தல் பிரசாரங்களில் தசுன் ஷானக்க - டுவிட்டர் பதிவில் விளக்கம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் தமக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என இலங்கை துடுப்பாட்ட அணியின் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக தனது படம் ஆங்காங்கே பயன்படுத்தப்படுவதனை, தான் அறிந்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
குறித்த பதிவில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும், தாம் எந்தவொரு கட்சியினதும் உறுப்பினராக செயற்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான ஆர்வம்
மேலும், தாய் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதே தனது உண்மையான ஆர்வம் என குறித்த பதிவில் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார்.
I’ve noticed my image circulating with a political party propaganda. I have no inclination with any party or ever have participated as any ambassador. My one true love and passion is playing cricket for my country. #cricket #mysrilanka
— Dasun Shanaka (@dasunshanaka1) January 30, 2023