போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு அந்த நாணயத்தாள்களை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், 500 ரூபாய் மதிக்கத்தக்க 18 போலி தாள்கள் மற்றும் 50 ரூபாய் மதிக்கத்தக்க 17 போலி தாள்களுடன் 23 மற்றும் 28 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய மடிக்கணினி, அச்சிடும் கருவி, உள்ளிட்டவற்றைக் கைப்பற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போலி நாணயத்தாள்கள்
பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பஹா, கிரிதிவிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவரும், அவருக்கு போலி நாணயத்தாள்களை வழங்கியதாகக் கூறப்படும் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
