யாழில் வாள்-போதைபொருளுடன் சிக்கிய இளைஞர்கள்: நீதிமன்றின் அதிரடி உத்தரவு
யாழில் (Jaffna) போதைப்பொருள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு இன்று (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 23 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில, யாழில் நேற்று (22) 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் ஐஸுடனும் மற்றையவர் ஐஸ் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல்
இதையடுத்து, இருவரும் இன்றையதினம் (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
தடுப்புகாவல்
அத்துடன், ஐஸுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 25 ஆம் திகதிவரை காவல்துறையினரின் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்டபோது காவல்துறை புலனாய்வாளர் சுதர்சனுக்கு 20 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதற்கு சந்தேகநபர்கள் முயன்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த காவல்துறை புலனாய்வாளர் அந்த இலஞ்சத்தை வாங்காமல் கடமையை நேர்த்தியாக செய்ததனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 11 மணி நேரம் முன்
