தலதா மாளிகையை நோட்டம் விட முயற்சியா -ட்ரோனுடன் கைதான சீன நாட்டவர்கள்
Sri Lanka Police
Kandy
Sri Lanka
China
By Sumithiran
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகாமையில் உள்ள கண்டி பாதுகாப்பு வலயத்தில் உரிய அனுமதியின்றி, ட்ரோன் கமராவை பறக்கவிட்ட சீன பிரஜைகள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜைகள் இருவரும் இன்று(08.05.2023) காலை 7:00 மணியளவில் ட்ரோன் கமராவை பறக்கவிட முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை
இதேவேளை ட்ரோன் கமராவை கண்டி தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சீன பிரஜைகள் இருவரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி