துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டவரின் வாக்குமூலம்! மீட்கப்பட்ட ஆயுதங்கள்
Colombo
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
கொழும்பு - மோதரை பகுதியில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் தற்போது காவலில் உள்ள “மோதர சத்துர” என்ற சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இயங்கும் நிலையில் துப்பாக்கி
இந்த நிலையில், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடிப்படையில் மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் இயங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறை கூற்றுப்படி, மேற்படி சந்தேகநபர், சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டு தற்போது துபாயில் தலைமறைவாக உள்ள “மோதர நிபுண” என்பவரின் சகோதரர் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்