கொழும்பில் நங்கூரமிட்டுள்ள 2 போர்க்கப்பல்கள்
SriLankan Airlines
Colombo
Pakistan
Sri Lanka Navy
By Thulsi
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
நல்லெண்ண வருகையாக ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன.
அக்கப்பல்கள் இலங்கைக் கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன.
கடற்படைப் பயிற்சி
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NIAMAT SAEED KHAN உம் ‘PNS ASLAT' கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NADIR MATEEN AFRIDI உம் உள்ளனர்.
மேலும், இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்