சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா
“சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்வது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
சீனாவில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்
“சீனாவில் இருந்து 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு டிசம்பர் 27ஆம் திகதி வந்திருக்கிறார். சீனா, ஜப்பான், தென் கொரியா,ஹொங்கொங், தாய்வான் போன்ற ஐந்து நாடுகளிலிருந்து தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்களுக்கு நேரிடையாக வந்தாலும் அல்லது இடம்மாறல் என்கின்ற வகையில் வேறு நாடுகளுக்கு சென்று வந்தாலும் அவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று மதுரை சுகாதாரத் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்திருந்தார்கள்.
அந்தவகையில், இந்த மூன்று பயணிகள் சீனாவிலிருந்து தென் கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து RTPCR பரிசோதனை செய்யப்பட்டதில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், அவர்களுடைய ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
வீட்டில் தனிமைப்படுத்தல்
இவர்களை
அந்தப் பெண்ணின் சகோதரர்
தன்னுடைய காரில் அழைத்துச் சென்று,
விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்
பகுதியில் அவர்களுடைய வீட்டிற்கு
சென்றிருக்கிறார். கொரோனா
பாதிப்பு கண்டறியப்பட்டவுடன்
அவர்கள் வீட்டில் தற்போது
தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களுடன் பயணித்த இன்னொரு
பெண் குழந்தைக்கு தொற்று பாதிப்பு
இல்லை என தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
