ஜப்பான் விமான நிலையத்தில் ஏற்பட்ட அனர்த்தம் - 400 பயணிகள் அருந்தப்பு
Japan
Plane Crash
By Sumithiran
ஜப்பான் விமான நிலையத்தில் 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதால் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
தாய் ஏர்வேஸ் மற்றும் ஈ.வி.ஏ ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விபத்து காரணமாக விமான நிலையம் வழியாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என அதிகாரிகள் பயணிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
ஈ.வி.ஏ ஏர் விமானத்தில் 207 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், தாய் ஏர்வேஸ் விமானத்தில் 264 பேர் இருந்ததாகவும் ஜப்பானிய ஊடகம் தெரிவித்தது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி