நேருக்கு நேர் மோதிய இரு தொடருந்துகள் - இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் பாரிய விபத்து
India
Accident
By Pakirathan
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்றையதினம் அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் தொடருந்தின் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
விபத்தில் ஒரு தொடருந்தின் இயக்குனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
