இலங்கை கடற்பரப்பில் உக்ரைன் மாலுமிகள் திடீர் மரணம் - தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka
Sri Lanka Police Investigation
Ukraine
Death
By Sumithiran
எகிப்தில் இருந்து இந்தியாவுக்குச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த உக்ரைன் மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்ததை அடுத்து காலி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகவும், உயிரிழந்தமை தொடர்பான விடயங்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு சடலங்கள்
சடலங்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 41 மற்றும் 53 வயதுடைய உக்ரைன் பிரஜைகளாவர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்