அமெரிக்காவில் இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்
அமெரிக்காவில் இரண்டு கருப்பைகளுடன் பிறந்த பெண்ணுக்கு இரண்டு கருப்பைகளிலும் கரு உருவாகி இரட்டை குழந்தைகள் பிறந்த அரிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர் (வயது 32) என்பவருக்கே இந்த அறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருந்தாலும் 17 வயதில் தான் கெல்சிக்கு இரண்டு கருப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
யூட்ரஸ் டைடெல்பிஸ்
மருத்துவ உலகில் மிகவும் அரிதான விடயம் என்பதோடு, பல லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே யூட்ரஸ் டைடெல்பிஸ் என்ற இரண்டு கருப்பைகள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
கெல்சி ஹேட்சர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காலப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 03 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், மீண்டும் கெல்சி கர்ப்பம் தரித்த போது, அவரது இரண்டு கருப்பைகளிலும் கரு உருவானது.
முந்தைய மூன்று கர்ப்பத்திலும் ஒரு கருப்பையில் மட்டுமே கரு உருவாகியிருந்தது.
அமெரிக்காவின் அலபாமா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
இது தொடர்பாகப் பேசிய மருத்துவர் ரிச்சர்ட் டேவிஸ்,
“கெல்சியின் நிலை மிகவும் தனித்துவம் வாய்ந்தது மற்றும் அரிதானது. ஆயிரத்தில் மூன்று பெண்கள் இரண்டு கருப்பைகளோடு, கருப்பை வாய்களுடன் பிறக்கின்றனர்.” என்றார்.
மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது குறித்து கெல்சி ஹேட்சர் கூறும் போது,
“எங்களின் அதிசய குழந்தைகள் பிறந்து விட்டன. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இரண்டு கருப்பைகளிலுமே குழந்தை உருவாகியிருப்பதை முதலில் நம்பவே இல்லை, மருத்துவ ஸ்கேன் அறிக்கையை பார்த்த பிறகே நம்பினேன்.” என்றார்.
சகோதர இரட்டையர்கள்
மருத்துவர்கள் இது பற்றி கூறுகையில்,
“கெல்சி ஹேட்சர் கர்ப்பம் தரித்தது முதல் குழந்தை பிறப்பு வரை கொஞ்சம் அதிகம் கடினம் நிறைந்ததாகவே இருந்தது. 39 வாரத்தில் அவருக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறி ஏற்பட்டது.
20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை இரண்டும் ஆரோக்கியமாக பிறந்தன. முதல் குழந்தை இயற்கையான முறையிலும் இரண்டாவது குழந்தை சி செக்ஷன் என சொல்லப்படும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தது.
இரட்டை குழந்தைகள் என்பது ஒரு கருப்பையில் பிறக்கும் இரண்டு குழந்தைகளை குறிக்கும். ஆனால் இரண்டு கருப்பைகளில் பிறந்த இந்த குழந்தைகளை சகோதர இரட்டையர்கள் என்று அழைக்கலாம்.” என்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |