ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு வீசா இன்றி நாட்டை விட்டு வெளியேற 2 மாதம் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த தரப்பினர் நாளை (01) முதல் வெளியேறமுடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்காலிக விசா
இந்த போது மன்னிப்புக் காலத்தின் போது, தொழில் வழங்குநரின் சட்ட அனுமதியின்றி பணியிடத்தை விட்டு வெளியில் இருப்பவர்களுக்கும், காவல்துறை முறைப்பாடுகளுக்கு உள்ளானவர்களுக்கும் அபராதம் அல்லது சட்டக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், “பொது மன்னிப்பில் வெளியேறுபவர்கள் அனுமதிப் பத்திரத்தைப் பெற்று 14 நாட்களுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தினை விட்டு வெளியேற வேண்டும்” என அந்நாட்டின் ஆட்பதிவு , சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |