ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு பின்னால் தனியார் நிறுவனம்! மறுக்கும் கட்சி தரப்பு
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு பின்னால் ஒரு தனியார் நிறுவனம் இருப்பதாக கூறுவது முற்றிலும் பொய்யானது என அக்கட்சியின் நுவரெலிய மாவட்ட வேட்பாளர் பிரதீஸ் வடிவேல் சுரேஸ் (Prathees Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்க்காணலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கை மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
எதிர்ப்பார்த்த மாற்றம் மலையகத்தில் இன்னும் ஏற்படவில்லை. தந்தையின் பெயரை வைத்து அரசியல் செய்யும நோக்கம் எனக்கில்லை.
தந்தை வடிவேல் சுரேஸின் (vadivel Suresh) பாதையில் செல்லாமல், நான் எனக்கான புதிய பாதையை உருவாக்கி அதிலேயே பயணிப்பேன்” என்றார்.
தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடாமைக்கான காரணம்? அரசியலுக்குள் திடீரென வந்தற்கான காரணம் ?
என்பவை தொடர்பில் விளக்குகின்றது கீழுள்ள காணொளி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |