பிரித்தானிய புதிய பிரதமரின் அமைச்சரவையில் இடம்பிடித்த ரணில் -இலங்கைக்கு கிடைத்த பெருமை
இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர் பிரிட்டனில் அமைச்சர்
பிரித்தானிய அரசாங்கத்தில் கபினட் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நபர் என்ற வரலாற்றை ரணில் ஜெயவர்தன படைத்துள்ளார்.
புதிய பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் முதலாவது அமைச்சரவையில் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலாளராக ரணில் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜோர்ஜ் யூஸ்டிஸுக்குப் பதிலாக ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 2015 இல் வடகிழக்கு ஹாம்ப்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்தார். மே 2020 முதல் செப்டம்பர் 2022 வரை முன்னர் சர்வதேச வர்த்தக அமைச்சராக பணியாற்றினார்.
ரணில் ஜெயவர்தன பொது சபையில் நுழைவதற்கு முன்னர், லொயிட்ஸ் வங்கியில் பணிபுரிந்தார், மேலும் ஹாம்ப்ஷயரில் கவுன்சிலராகவும் இருந்தார்.
ரணில் குறித்து மேலதிக தகவல்கள்
ரணிலின் தந்தையாகிய நளின் ஜயவர்தன இலங்கை வம்சாவளியினர் ஆவார். ரணிலின் தாயாகிய இந்திரா ஜயவர்தனவோ இந்திய வம்சாவளியினர் ஆவார்.
நளின் ஜயவர்தன, 1978ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார். ரணிலின் மனைவியின் பெயர் Alison. தம்பதியருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

