ஆங்கிலக் கால்வாயில் ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டன்
ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ரஷ்யாவின் நிழல் கடற்படைக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பலை பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றியுள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
"இந்த வெற்றிகரமான நடவடிக்கை ரஷ்யாவிற்கு மற்றுமொரு அடியை வழங்குகிறது. மேலும், உக்ரைனில் புடினின் போருக்குத் தூபம் போடுபவர்களை நாங்கள் ஒளிந்துகொள்ள விடமாட்டோம் என்பதை இது நினைவூட்டுகிறது," என்று ஸ்டார்மர் ஞாயிற்றுக்கிழமை X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஸ்மிர்டோஸ் என்ற கப்பல் கைப்பற்றப்பட்டதை ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியது.
கமரூன் கொடியின் கீழ் பயணித்த கப்பல்
கமரூன் கொடியின் கீழ் பயணித்த அந்தக் கப்பலில், சினூக் உலங்குவானூர்திகள் மற்றும் பிற விமானங்கள், ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒரு கண்ணிவெடி வேட்டைக்கப்பல் ஆகியவற்றின் ஆதரவுடன் றோயல் மரைன் கமாண்டோக்கள் மற்றும் தேசிய குற்றவியல் முகமை அதிகாரிகள் ஏறினர் என்று அது கூறியது.
Despite Putin’s best efforts to evade sanctions, we will not let him get away with it. pic.twitter.com/IIW3Cv2ENQ
— Keir Starmer (@Keir_Starmer) June 14, 2026
"இதுபோன்ற நடவடிக்கைகளுக்குத் திறமை, தொழில்முறை மற்றும் தைரியம் தேவை. நமது ஆயுதப் படை வீரர்களுக்கும் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பாதுகாப்புச் செயலாளர் டான் ஜார்விஸ் ஒரு அறிக்கையில் கூறினார்.
ஆறு மணி நேரம் நீடித்த நடவடிக்கை
"உக்ரைனில் நடக்கும் தனது போருக்கு நிதியளிக்க ரஷ்யா தனது நிழல் கடற்படையை நம்பியுள்ளது, மேலும் எங்களின் இந்தத் தடை நடவடிக்கை புடினின் சட்டவிரோதப் போருக்கு ஒரு பெரும் அடியை வழங்குகிறது." இந்த நடவடிக்கை ஆறு மணி நேரம் நீடித்ததாக அமைச்சகம் கூறியது.

அந்தக் கப்பல் "தற்காலிகமாக இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஒரு நங்கூரமிடும் இடத்திற்கு மாற்றப்பட்டு, ஏதேனும் சுற்றுச்சூழல் அல்லது பாதுகாப்பு தொடர்பான கவலைகள் உள்ளதா எனக் கண்காணிக்கப்படும்" என்றும் மேலும் கூறியது.
ரஷ்யாவுடன் தொடர்புடைய கப்பல்கள் கைப்பற்றப்பட்டதை புடின் "கடற்கொள்ளை" என்று கண்டித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |