இந்து ஆலயம் மீதான வன்முறை - வழிபாட்டு தலங்களை பாதுகாக்கத் தவறிய பிரித்தானிய காவல்துறை; கடும் கண்டனம்!

United Kingdom Pakistan India Hinduism Asia Cup 2022
By Kalaimathy Sep 20, 2022 12:16 PM GMT
Report

பிரித்தானியாவில் உள்ள லெய்செஸ்டர் நகரில் இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.

அந்த மோதல் சம்பவத்தின் போது இந்து ஆலயம் சேதமாக்கப்பட்டதோடு, கொடி சீலையும் கிழித்து வீசப்பட்டது.

இதனையடுத்து, இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தி மத சின்னங்களை சேதப்படுத்தியமைக்கு பிரித்தானியாவிற்கான இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மோதல் இடம்பெற்ற போது, அப்பகுதி சுயேட்சை எம்.பி., கிளாடியா வெப், “அனைவரும் அமைதியாக கலைந்து அவரவர் வீட்டுக்கு செல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

வன்முறையாக வெடித்த சம்பவம்

இந்து ஆலயம் மீதான வன்முறை - வழிபாட்டு தலங்களை பாதுகாக்கத் தவறிய பிரித்தானிய காவல்துறை; கடும் கண்டனம்! | Uk Hindu Temple Attack Fighting Streets Police

இந்தப் பிரச்னை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை பெரிதாகி, திங்கட்கிழமை வன்முறையாக வெடித்துள்ளது என பிரித்தானிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியதில், இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் கிழக்கு லெய்செஸ்டரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.

அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என ஒலிக்கப்பட்டது. அதனையடுத்து மறுபுறம் எதிர் தரப்பினர் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்துக்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

வழிபாட்டு தலங்களை பாதுகாக்கத் தவறிய காவல்துறை

இந்து ஆலயம் மீதான வன்முறை - வழிபாட்டு தலங்களை பாதுகாக்கத் தவறிய பிரித்தானிய காவல்துறை; கடும் கண்டனம்! | Uk Hindu Temple Attack Fighting Streets Police

மேலும் இதில் இந்துக்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர், “எங்களின் கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்களை பாதுகாக்க காவல்துறை தவறிவிட்டது” என்று குற்றஞ்சாட்டினார்.

மறுபுறம் தங்களின் வழிபாட்டு தலமும் தாக்கப்பட்டது என இஸ்லாமியர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பிரித்தானியாவில் கால்பந்து போட்டியின் போதும் இதே போன்று வன்முறைகள் கடந்த காலங்களில் நடந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஜூலை 2021 இல் ஐரோப்பிய சம்பியன்ஷிப்பிற்காக இங்கிலாந்து இத்தாலி விளையாடும் ஸ்டேடியத்தை டிக்கெட் இல்லாமல் ரசிகர்கள் முற்றுகையிட்டதால் வெம்ப்லியில் குழப்பம் ஏற்பட்டது.

இது கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த மோசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் வேறுபட்டவை,  அவை பெரும்பாலும் வலுவான வகுப்புவாத சுயவிவரத்தைக் கொண்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே வன்முறை ஏற்படும் சாத்தியம்

இந்து ஆலயம் மீதான வன்முறை - வழிபாட்டு தலங்களை பாதுகாக்கத் தவறிய பிரித்தானிய காவல்துறை; கடும் கண்டனம்! | Uk Hindu Temple Attack Fighting Streets Police

இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களும் அணிகளுக்கிடையே உள்ள நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை, மேலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள் அனைத்தும் இரு நாடுகளிலும் அமைதியின்மை மற்றும் வன்முறைக்கு சாத்தியமுள்ள பதட்டமான விவகாரங்களாகும்.

இரு சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை அச்சமூக தலைவர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் இளைஞர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

சம்பவ பகுதியில் இன்னமும் பதற்றம் நிலவுகிறது. அப்பகுதியில் உள்ள ஜெயின் மற்றும் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் வன்முறை எதற்கும் தீர்வல்ல.

சமூக ஊடகங்களின் தவறான தகவல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம். தற்போது நமக்கு தேவை அமைதி. இது அமைதிக்கான நேரம் என பட்டேல் என்பவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் லெய்செஸ்டரில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான அளவில் வாழ்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை 7.4 மற்றும் 7.2 சதவீதம் ஆக உள்ளது.

அடுத்தபடியாக சீக்கியர்கள் 2.4 சதவீதம் உள்ளனர். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் ஆக உள்ளது. அதேநேரத்தில் இங்கு சொல்லிக் கொள்ளும்படி யூதர்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016