அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ள பிரித்தானிய - இந்திய தொழிலதிபர்

United States of America United Kingdom
By Dharu Oct 04, 2026 08:02 PM GMT
Report

அங்கீகரிக்கப்படாத புற்றுநோய் மருந்துகளை வழங்கி, அமெரிக்காவின் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிடமிருந்து பல மில்லியன் டொலர்களை மோசடியாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பிரித்தானிய - இந்திய தொழிலதிபர் ஒருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகி குமன் (48) எனப்படும் குறித்த தொழிலதிபர் மற்றும் அவரது முன்னாள் மனைவி கிரண்ஜித் குமன் ஆகியோரே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் தனித்தனியான மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டுகளிலும் அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் தர்மசங்கடத்தில் இலங்கை : சுட்டிக்காட்டும் தயான் ஜயதிலக்க

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் தர்மசங்கடத்தில் இலங்கை : சுட்டிக்காட்டும் தயான் ஜயதிலக்க

பண இலாப விவகாரம்

அமெரிக்க அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டின்படி, அமெரிக்காவின் மத்திய சுகாதார காப்பீட்டுத் திட்டமான Medicare-ஐ தவறாக வழிநடத்தி, அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ள பிரித்தானிய - இந்திய தொழிலதிபர் | Uk Indian Businessman Set To Be Extradited The Us

ஆனால், அதற்குப் பதிலாக குறைந்த விலையில் கிடைத்த மாற்று மருந்துகளை வழங்கி, இரண்டிற்கும் இடையிலான பண வித்தியாசத்தை மோசடியாகப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான நாடு கடத்தல் விசாரணை தற்போது லண்டனில் உள்ள Westminster Magistrates’ Court நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

எனினும், சுகி குமன் அனைத்து குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துள்ளார். தம்மால் புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைச் செலுத்த முடியாத நோயாளிகளுக்கு உதவவே முயன்றதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட திட்டத்தின் மூலம் தாம் எந்தவித பண இலாபத்தையும் பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா தெற்கு மாவட்ட நீதிமன்றம், சான் டியாகோவில், இருவரையும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மருந்துகள்

2019 செப்டெம்பர் முதல் 2023 ஏப்ரல் வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய விசாரணையில், Medicare உள்ளிட்ட அமெரிக்காவின் பல சுகாதார காப்பீட்டுத் திட்டங்களிடமிருந்து பல மில்லியன் டொலர்களை மோசடியாகப் பெறுவதற்கான திட்டம் கண்டறியப்பட்டதாக அமெரிக்க அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான Peter Caldwell KC தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ள பிரித்தானிய - இந்திய தொழிலதிபர் | Uk Indian Businessman Set To Be Extradited The Us

கலிபோர்னியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் இருவரின் கட்டுப்பாட்டில் இருந்த புற்றுநோய் சிகிச்சை நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் பெறப்பட்ட, அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படாத கீமோதெரபி உள்ளிட்ட மருந்துகள் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் வழக்குத் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட சில மருந்துகள் அவற்றின் காலாவதி திகதியை கடந்திருந்ததாகவும் விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நாடு கடத்தல் விசாரணையின் முடிவைத் தொடர்ந்து அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022