வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிலாளர்கள் - பிரித்தானிய ரயில் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
பிரித்தானியாவில் ரயில் தொழிலாளர்கள் பணியில் இருந்து வெளியேறுவதால் பாரிய இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
45,000க்கும் மேற்பட்ட ரயில் தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் விதிமுறைகள் தொடர்பான சர்ச்சை காரணமாக வெளியேறுவதால், பிரித்தானியாவில் பாதி ரயில் வழித்தடங்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மூடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், வேலை நிறுத்தம் காரணமாக 20 சதவீத சேவைகள் மட்டுமே இயங்குவதால் ரயில் பயணிகள் அதிக இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.
மட்டுப்படுத்தப்பட்ட சேவை

இதேவேளை சில இடங்களில் சேவைகள் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவ்வாறு ரயில் இயங்கும் இடங்களில் இரண்டு வேலைநிறுத்த நாட்களிலும் அந்நாட்டு நேரப்படி ரயில்கள் 07:30 முதல் 18:30 வரை மட்டுமே இயக்கப்படும்.
இதனிடையே, அத்தியவசியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே ரயிலில் பயணிக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தால் மாறவுள்ள திட்டங்கள்

இது கோடைகால வேலைநிறுத்தம், லண்டனில் உள்ள லோர்ட்ஸில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கு செல்வோர், திருவிழாவிற்கு செல்பவர்களின் பயணத் திட்டங்களை மாற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நாடு முழுவதும் மொத்தம் 4,300 சேவைகள் இயங்கும் என்று நெட்வொர்க் ரெயில் தெரிவித்துள்ளது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.