பிரித்தானியா விதித்த தடை: வெளியானது இலங்கை அரசின் நிலைப்பாடு!

Karuna Amman Sri Lankan Peoples United Kingdom Sri Lanka Government
By Dilakshan Mar 26, 2025 11:49 AM GMT
Report

கடந்த காலங்களில் ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

நாட்டின் முன்னாள் மூன்று இராணுவத் பிரதானிகள் உட்பட நான்கு பேர் மீது ஐக்கிய இராச்சியம் விதித்துள்ள தடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று (26) அறிவிக்கும் போதே வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு பொறிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் சோகத்தில் முடிந்த யாழ்ப்பாண பயணம்: அடுத்தடுத்து மூவர் பலி!

பெரும் சோகத்தில் முடிந்த யாழ்ப்பாண பயணம்: அடுத்தடுத்து மூவர் பலி!

 

ஒருதலைப்பட்ச நடவடிக்கை 

"இலங்கை உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் தடைகள்" என்ற தலைப்பில் 2025 மார்ச் 24, அன்று ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கை, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரித்தானியா விதித்த தடை: வெளியானது இலங்கை அரசின் நிலைப்பாடு! | Uk Sanctions Ban Sl Govt S Position Revealed

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளதுடன், அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் பிரதானிகள் ஆவர்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொந்தமான அந்நாட்டில் உள்ள சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது உள்ளிட்ட இந்தத் தடைகள், ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கை என்பதை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வலியுறுத்துகிறது.

நாடுகளால் எடுக்கப்படும் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கை, இலங்கையில் உள்நாட்டு நல்லிணக்க செயல்முறைக்கு எந்த ஆதரவையும் வழங்காது, என்பதுடன், நிலைமையை மேலும் குழப்பமடையச் செய்வதே நோக்கமாகும்" என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

போரை நடத்தியதே நான்தான்..! பிரித்தானியாவின் முடிவுக்கு எதிராக மகிந்த ஆவேசம்

போரை நடத்தியதே நான்தான்..! பிரித்தானியாவின் முடிவுக்கு எதிராக மகிந்த ஆவேசம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025