இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் விபத்தில் படுகாயம்
Sri Lanka Tourism
Sri Lanka
England
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் ஒருவர் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து
குறித்த பெண் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, காயமடைந்த 34 வயதுடைய இங்கிலாந்து பெண், சிகிச்சைகளுக்காக தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்