சிதைக்கப்பட்ட ரஷ்ய துறைமுகம்! சீறிப் பாய்ந்து தாக்கிய உக்ரைனிய ட்ரோன்கள்
ரஷ்யாவின் கருங்கடல் கரையில் அமைந்துள்ள துவாப்ஸ் துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் துறைமுகப் பகுதியும் அங்கிருந்த எண்ணை கப்பலும் தீப்பிடித்து எரிந்துள்ளன.
கடுமையாக சேதம்
தாக்குதல் நடந்தவுடன் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும், துறைமுக கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.

Image Credit: Euromaidan Press
துவாப்ஸ் துறைமுகம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உலக சந்தைகளுக்கு அனுப்பும் முக்கிய மையமாகும்.
இந்த நிலையில், குறித்த தாக்குதல் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.
உக்ரைனின் தாக்குதல்
இத்துறைமுகத்தில் உள்ள எண்ணை முனையம் ரஷ்யாவின் மிகப்பெரிய எரிபொருள் நிறுவனமான ரோஸ் நெப்ட் (Rosneft) நிறுவனத்துக்குச் சொந்தமானது. சமீபத்தில் இந்த நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்திருந்தது.

இதேவேளை, கடந்த சில நாட்களுகளுக்கு முன்னதாக ரஷ்ய படைகளுக்கான எரிபொருள் விநியோகம் செய்யும் பிரதான குழாய்களையும் உக்ரைன் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |