ரஷ்யாவை கதிகலங்கை வைக்கும் உக்ரைன் : எரிசக்தி மையங்கள் மீது தொடர் தாக்குதல்கள்
ரஷ்ய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்ய எரிசக்தி மையங்கள் மீது இன்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அதனை அந்நாடு மறுத்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்
ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள ரோஸ்டோவ் பகுதியின் எரிபொருள் சேமிப்பு மையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சரடோவ் மாகாணத்தில், ட்ரோன் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமீப காலமாக, ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் அதிகளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தி வரும் 4 ஆண்டு காலத் தாக்குதல்களுக்கு நிதியளிப்பதில் எரிசக்திக் துறையே முக்கியப் பங்காற்றி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஸபோரிஷியா அணுமின் நிலையம் மீதும் தாக்குதல்
இந்த நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல, ரஷ்யாவின் ரோசாட்டம் அணுமின் நிலையத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில். தாங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகவும், எந்த அணு உலை மற்றும் எர்சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அப்படியான தாக்குதல்களின் விளைவுகளைப் பற்றி அறிந்திருப்பதாகவும் இது ரஷ்யாவின் தந்திரம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷியாவின் முழுமையான ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஸபோரிஷியா அணுசக்தி மையம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |