உக்ரைன் அதிரடி தாக்குதல் : ரஷ்யாவின் கப்பல் தாக்கி அழிப்பு
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவில் உள்ள துறைமுகத்தில் உக்ரைன் விமானப்படை நடத்திய வான்வெளி தா்குதலில் ரஷ்ய தரையிறங்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், தனது போர்க்கப்பல் ஒன்று சேதமடைந்ததை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.
அதிகாலைவேளை நடத்தப்பட்ட தாக்குதல்
கிரிமியாவில் உள்ள ஃபியோடொசியா (Feodosiya) என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
நோவோசெர்காஸ்க் என்ற பெரிய கப்பலை உக்ரைன் விமானம் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கிவிட்டு தப்பி விட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் அந்தக் கப்பல் இப்போது "ரஷ்ய நீருக்கடியில் கருங்கடல் கடற்படையில்" சேர்ந்துள்ளது என்று கேலி செய்தார்.
பல்கலைக்கழக மாணவியின் மரணம் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விடுத்துள்ள பணிப்புரை
உக்ரைனிய விமானப்படையின் தலைவர், முன்னதாக அதன் போர் விமானங்கள் ரஷ்ய போர்க்கப்பலை அழித்ததாகக் கூறினார்.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவால் நிறுவப்பட்ட கிரிமியாவின் ஆளுநர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
துறைமுகத்தில் வழக்கமான போக்குவரத்து
ஆறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என்றும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தற்காலிக தங்குமிட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அக்சியோனோவ் (Aksyonov) மேலும் கூறினார்.
தாக்குதலினால் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு துறைமுகத்தில் வழக்கமான போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்ந்து இயங்கியதாக கூறப்படுகிறது.
துறைமுகத்தில் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் காட்சிகள் உக்ரைனிய விமானப்படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக் பகிர்ந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |