புடின் இல்லத் தாக்குதல் ஒரு கட்டுக்கதை: ரஷ்யாவின் குற்றச்சாட்டை உடைத்தெறிந்த ஜெலென்ஸ்கி...!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது.
இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “அமெரிக்காவின் இராஜாங்க முயற்சிகளை வரவேற்று அமைதி ஏற்பட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரதிநிதிகளுடன் உக்ரைன் தரப்பு நெருக்கமாக செயலாற்றி வருகின்றது.
அரசு கட்டடங்கள்
அப்படிப்பட்ட சூழலில், புடினின் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் மீது ரஷ்யா சுமத்தும் பழி வெறும் கட்டுக்கதை.
கீவ் மற்றும் உக்ரைனில் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர்.

அத்தோடு, போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளிலிருந்து விலகுவதற்காக ரஷ்யா எங்கள் மீது பழி சுமத்துகின்றது.
இது வழக்கமான ரஷ்யாவின் பொய்ப்படலங்களில் ஒன்று, கீவில் கடந்த காலங்களில் அமைச்சர்கள் வளாகம் உள்பட முக்கிய அரசு கட்டடங்களை ரஷ்யா தாக்கியுள்ளது.
இராஜாங்க முயற்சி
இராஜாங்க முயற்சிகளை சீர்குலைக்கும் விதத்தில் உக்ரைன் எப்போதும் நடந்துகொள்ளாது.
இருப்பினும் ரஷ்யா அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கை, இதுவே எங்களுக்குள் இருக்கும் வித்தியாசங்களில் ஒன்று.

அமைதியை நிலைநாட்டுவதற்கான செயல்பாடுகளை சீர்குலைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை நாம் அனுமதிக்க முடியாது.
உலக நாடுகள் இப்போதும் அமைதியைக் கடைப்பிடித்து மௌனம் காக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |