ரஷ்ய தலைநகரில் நடந்த சக்திவாய்ந்த வெடிப்பு - பல கட்டிடங்கள் முற்றாக சேதம் (காணொளி)
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் நேற்றையதினம் ஒரு சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மொஸ்கோவிலிருந்து வடகிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செர்கியேவ் போசாட் நகரில் உள்ள இராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் , 60 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
டிரோன் தாக்குதல்
இந்த வெடிவிபத்தால் 38 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமைடைந்துள்ளன.
உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்த நிலையில் இதனை ரஷ்ய செய்தி நிறுவனம் நிராகரித்துள்ளது.
BREAKINg:
— Visegrád 24 (@visegrad24) August 9, 2023
There has been a massive explosion at the Zagorsk Optical and Mechanical Plant near Moscow.
The plant is one of the main producers of military optics for the Russian Army.
Very bad news for Russiapic.twitter.com/Mgb4AnnCno
The optical and mechanical plant near Moscow in Serhiyiv Posad produced night sights for tanks, sights for aircraft and equipment for self-guided missiles
— Ukraine Front Lines (@EuromaidanPR) August 9, 2023
Here how this plant looks now. pic.twitter.com/ntkAep9Xvj