செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து நேற்றுடன் (30) மொத்தமாக 33 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சிறுவர்களின் இரண்டு எலும்புக்கூடுகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளை வெளியே மீட்டெடுப்பதில் பாரிய சிக்கலை மீட்புக் குழு எதிர்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரணித்தா தெரிவித்தார்.
மீட்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
குறித்த என்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால் எலும்புக் கூடுகளை வெளியே பிரித்தெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிதாக எலும்புக்கூடுகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் நேற்று மேற்க்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
செம்மணி மனிதப் புதைகுழியில் அடுத்தடுத்து வெளிப்படும் மனித எச்சங்கள்!
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, நான்காம் நாள் அகழ்வாய்வு பணிகள் இன்று (29) முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றுவரை 27 மனித எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 6 மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
33 ஆக உயர்வடைந்துள்ளன
இந்நிலையில் இதுவரை 33 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேனை செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளை 45 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு அனுமதி கிடைத்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமானது.
இந்தநிலையில், 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று, பின்னர் சிறிய கால இடைவெளியின் பின்னரே அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
