பிரித்தானியா செல்வோருக்கு வெளியான அதிரடி அறிவிப்பு...!
எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி முதல், பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளும் பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் மின்னணு பயண அங்கீகாரம் (ETA) வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின்படி, இரட்டைப் பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்கள் (குறிப்பாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சுமார் 2.5 லட்சம் பேர்) இனி அவுஸ்திரேலிய கடவுச்சீட்டுடன் ETA-வைப் பயன்படுத்த முடியாது.
இந்தநிலையில், அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல் சேவைகள்
இல்லையெனில், சுமார் £589 கட்டணத்துடன் கூடிய Certificate of Entitlement (COE) ஆவணத்தைப் பெற வேண்டியிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தைப் பெறப் பல வாரங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளைப் பின்பற்றாத பயணிகளை விமானம் மற்றும் கப்பல் சேவைகள் ஏற்ற மறுக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை விடுமுறை
தொழில் பயணம், குடும்பச் சந்திப்பு அல்லது பாடசாலை விடுமுறைகளுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்த பலர், இந்தத் திடீர் மாற்றத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து நான்கு பிரித்தானிய கடவுச்சீட்டுகளைப் புதுப்பிக்க AU$1,100-க்கும் அதிகமான செலவு ஏற்படுவது குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
பயணத் திட்டங்களில் தெளிவு பெற விரும்புவோர் அல்லது அவசர ஆவணச் செயல்முறைகளை விரைவுபடுத்த வேண்டியோர், VisaHQ நிறுவனத்தின் அவுஸ்திரேலிய தளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து ETA தகுதி மற்றும் கடவுச்சீட்டு புதுப்பிப்பு குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 6 மணி நேரம் முன்