தொடர் பதவி விலகல்கள்...! ஊழலற்ற ஆட்சி முழக்கத்திற்கு விழுந்த முதல் அடி - சிதைந்த அரசாங்கத்தின் பிம்பம்
ஊழலற்ற நிர்வாகம் என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியிலிருந்து விலகியிருப்பது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நிலக்கரி கொள்முதல் முறைகேடு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு இடமளிப்பதாகத் தெரிவித்து இவர் பதவி விலகினாலும் இது ஊழல் கறையை மறைப்பதற்கான ஒரு தற்காலிக நகர்வே என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமைச்சருடன் சேர்ந்து அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் பதவி விலகியுள்ளமை எரிசக்தித் துறையில் நிலவும் பாரிய நிர்வாகக் குளறுபடிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
சிஸ்டம் சேஞ்ச் என்று கூறிவிட்டுப் பழைய அரசியல் கலாச்சாரத்தைப் போலவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அமைச்சர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருப்பது அரசாங்கத்தின் தேர்தல் கால பிம்பத்தைச் சிதைத்துள்ளது.
முக்கிய அமைச்சர்கள் மீதே ஊழல் புகார்கள் எழுவதும் அவர்கள் பதவி விலகுவதும் தற்போதைய ஆட்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் கொள்கை உறுதிப்பாட்டின் மீது பாரிய நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்துள்ள நிலையில் இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் ஆய்தம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |