புதிய தாக்குதலுக்கு தயாராகும் உக்ரைன்..!
ரஷ்ய படைகள் மீதான புதிய எதிர் தாக்குதலுக்கு உக்ரைன் படைகள் மிகவும் கவனமாக தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதல் மிகவும் முக்கியமானவை மற்றும் வெற்றியை பெற்றுத் தர வேண்டும் என்றும் உக்ரைனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலக போரில் நாஜிகளை சோவியத் யூனியன் வென்றதை குறிப்பிடும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய் கிழமை வெற்றி தினத்தை நினைவு கூர்ந்தார்.
பிரித்தானிய மற்றும் நியூசிலாந்து படைகள்
இந்நிலையில் ரஷ்ய படையெடுப்பை எப்போது முழுமையாக வெற்றி கொள்கிறோமோ அன்றே, உக்ரைனுக்கு முக்கியமான வெற்றி நாள் என்று அந்த நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது இந்த கருத்தை உக்ரைனிய பிரதமர் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து பிரித்தானிய மற்றும் நியூசிலாந்து படைகள் இணைந்து உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரித்தானிய இராணுவ பயிற்சி தளத்தையும் உக்ரைனிய பிரதமர் ஷ்மிஹால் பார்வையிட்டார்.
அதன் பின் தெரிவித்த கருத்தில், உக்ரைன் மிகவும் கவனமாக மிகவும் முக்கியமான திட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.
இந்த திட்டத்தின் மூலம் ஏற்படும் வெற்றியை நாட்டு மக்களுக்கும் நட்பு நாடுகளுக்கு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன் சரியான நேரம் வரும் போது, எப்போது முழுமையாக தயாராக இருக்கிறோமோ, அப்போது எதிர்ப்பு தாக்குதலை தொடங்குவது குறித்து ராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
