உக்ரைனின் பதில் தாக்குதல் - இராணுவ நிபுணர்கள் எச்சரிக்கை..!
உக்ரைனின் ஷப்போறிஸ்ஷியா பிராந்தியம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல்களை உக்ரைன் மேற்கொண்டுவருகின்றது.
இந்தப் பிராந்தியத்தில் ரஷ்யா தற்காப்பு தந்திரோபாயங்களை மேற்கொண்டுவருவதாக உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனின் பதில் தாக்குதல்கள் ஷப்போறிஸ்ஷியா பிராந்தியத்தை இலக்குவைத்ததாக இருக்கும் என பல்வேறு இராணுவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடுமையான மோதல்
அந்த வகையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தை இரண்டாக பிளவுபடுத்தும் தாக்குதல்களை உக்ரைன் மேற்கொண்டுவருகின்றது.
இதனிடையே கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க்கில் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிவரும் உக்ரைனிய படையினருக்கு அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மிகவும் கடினமான படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் போர் வெற்றிகள் குறித்த எந்தவொரு தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.
பரஸ்பர குற்றச்சாட்டு
இதனிடையே ககோவ்கா(Kakhovka)அணைத் தகர்ப்பினால் கொலரா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனிய படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கெர்சன் பிராந்தியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிப்பதற்கு குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ககோவ்கா அணை மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றன.
