உக்ரைன் தாக்குதலால் பின்வாங்கும் ரஷ்ய படைகள்
உக்ரைனியப் படைகள், பாக்முட் அருகே ரஷ்ய படைகளுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் முன்னேற்றம் கண்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக பாக்முட் நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா படைகளுக்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
குறித்த தாக்குதலில் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் 1,400 மீட்டர் வரை உக்ரைன் படைகள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான இழப்பு
எனினும் ரஷ்யப் படைகள் எதிர்த்தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவை வெற்றிபெறவில்லை என்றும் சர்வதேச ஊடகம் ஒன்று ரஷ்ய இராணுவத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனியப் படைகள், ரஷ்ய துருப்புக்களுக்குக் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியதோடு, அப்பகுதியில் இராணுவத் தளபாடங்களையும் அழித்ததாகவும் கூறப்படுகிறது.
